பனாமா கசிவால் இங்கிலாந்து பிரதமரின்  தந்தையும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தந்தையின் வெளிநாட்டு பணத்தால் தான் பயனடைந்துள்ளதாக  இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் ஒப்புக்கொண்டார்.

சேனல் ஐ.டி.வி.க்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் அளித்த போட்டியில் தன்னுடைய தந்தையின் மூலமாக வெளிநாட்டில்  30 ஆயிரம் பவுண்ட் மதிப்பிலான பங்கு கொண்டிருந்தேன் என்று தெரிவித்ததோடு அதை கடந்த 2010 ஆம் ஆண்டே இங்கிலாந்து பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளுவதற்கு  4 மாதங்களுக்கு முன்னதாகவே பங்கை விற்பனை செய்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

'பிளைர்மோர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டில் 5 ஆயிரம் பங்குகளை கொண்டிருந்தோம், அவற்றின் பங்குகள் மதிப்பு 30 ஆயிரம் பவுண்ட்கள் ஆகும். நான் பிரதமர் ஆக இருந்த நிலையில் அனைத்தையும் 2010 ஆம் ஆண்டே விற்பனை செய்துவிட்டேன்,' என்று கெமரூன் கூறியுள்ளார்.