காணாமல்போன சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு தேயிலை மலை பகுதியிலிருந்து மீட்பு

Published By: Vishnu

20 Feb, 2019 | 11:16 AM
image

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய சிறுவன் இன்று காலை 9 மணியளவில் அப் பகுதி தேயிலை மலை பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனம் நேற்று மாலை தனது வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது, திடீரென காணாமல் போயிருந்தான்.

நேற்றிரவு வரை சிறுவனை மீட்கும் பணியில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டிருந்தனர்.

இரவு வரை தேடியும் கிடைக்காத பட்சத்தில் இன்று காலை பிரதேசவாசிகள் அப்பகுதி தேயிலை மலைகளில் தேடும் பொழுது மேற்படி சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் தேயிலை மலை பாதையில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

தேயிலை மலை பாதையில் குறித்த நபர் ஒருவர் சிறுவனை விட்டுச் செல்வதை கண்ட பிரதேசவாசிகள் குறித்த நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும் மேற்படி சந்தேகிக்கும் நபரை தேடும் பணியில் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் ஈடுப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவனை அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:06:39
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47