மடுல்சீமையில் பழமைமிகு ஆலயமொன்றின் அருகே புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஏழு பேரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பகுதியின் குருவிக்கொல்லை என்ற இடத்தின் பழமைமிகு ஆலயமொன்றின்

அருகிலேயே இப்புதையல் தோண்டப்பட்டதாகும்,மடுல்சீமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே பொலிசார் விரைந்து புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஏழுபேரைக் கைது செய்தனர். மேலும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையிலான உபகரணங்களையும் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோன்றுவதற்கென்று வந்த வேன் ஒன்றையும்,கார் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவித்தார்.