கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட காதல் ஜோடியான விராட் கோலி -அனுஷ்கா சர்மா தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டனர். 

பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இருப்பினும் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் போட்டியில் கோலியின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்.

அதேபோன்று கோலியும் உடைந்த போன காதலை மீண்டும் ஒட்ட வைக்க அனுஷ்காவின் சகோதரர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் அனுஷ்கா, கோலியுடன் சேரும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டார்.

இருப்பினும் காதலி அனுஷ்கா சர்மாவை சமூகவலைதளங்களில் கேலி செய்தவர்களை விளாசித் தள்ளினார் விராட் கோலி.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா- விராட் கோலி மீண்டும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அனுஷ்கா சர்மா கறுப்பு நிற உடையும், கோலி சாதாரண ஒரு டி-சேர்ட் அணிந்த படி இரவு ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர். 

தற்போது கோலி ஐபிஎல் போட்டியிலும், அனுஷ்கா சர்மா சுல்தான் படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.