நாட்டில் தற்போது அரச, அரச சார்பு, தனியார் துறைகளில் நிறுவன ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதீயாக பயன்படுத்தப்படுகின்ற அனைத்து இயந்திர வாள்களையும் (Chainsaw machines) இன்று தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பதிவுசெய்யப்பட உத்தரவுப்பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைவாகவே அனுமதியின்றி மரங்களை வெட்டுவதனால் ஏற்படுகின்ற அழிவுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.