உலக முடிவில் உள்ள பகுதியில் தேசிய பூங்காவினுள் சிகரட் புகைத்தலில் ஈடுப்பட்ட மாத்தளை பகுதியை சேர்ந்த 2பேர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் நுவரெலியா நீதிமன்ற நீதவான் 70 அயிரம் ரூபா தண்டபணம் செலுத்துமாறு பணித்துள்ளார்.

இவர்கள் நேற்று முன்தினம் பூங்காவில் வைத்து சிகரட் புகைத்துக்கொண்டிருந்த வேளையில் தாவரவியல் பூங்கா அதிகாரியால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும் தாவரவியல் பூங்காவினுள் இவ்வாறான சட்டவிரோதமான செயல்கள் இடம்பெற கூடாது என்பதற்காக இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டதாகவும் பூங்காவின் அதிகாரி தெரிவித்தனர்.