ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. பலமுறை போர் நிறுத்த ஒப்பத்தந்தத்துக்கு அரசு மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டு அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீண்டும்  ஒப்பு கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை,” இரண்டு நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஹோடேடாஹ் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு ஏமன் அரசு மற்றும் ஹவுத்தி கிளர்சியாளர்கள்  ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உணவு மற்றும் மருத்துவ வசதி தேவைபடும் மக்களுக்கு வேண்டிய உதவிகள் சேரும் என்று நம்புகிறோம். போர் நிறுத்தம் படிபடியாக அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.