போதை பொருட்களுடன் ஹட்டன் வழியாக சிவனடிபாத மலைக்கு யாத்திரிகளாக வந்த 17 இளைஞர்கள் ஹட்டன் வலய குற்றதடுப்பு  பிரிவினரால் நேற்று மாலை கைதுசெய்யபட்டுள்ளனர்.

நேற்று மாலை வேளையில் ஹட்டன் பிரதான வீதியில் தியகல சந்தியில் வைத்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கேரள கஞ்சா மற்றும் ஏனைய போதை பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் காலி,மாத்தற மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 25வயதிற்கும் 30 வயதிற்கும் இடைபட்டவர்கள் என ஹட்டன் வலய குற்றதடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தபடவுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.