பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததுள்ளதுடன் இதற்கு தலீபானியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இறுதியில் கத்தார் தலைநகர் தோகாவில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆப்கன் விவகாரத்தில் தீர்வுகாண ஒரு ஒப்பந்தத்தை கட்டமைக்க இரு தரப்பும் ஒப்புதல் அளித்தன. அதே சமயம் குறிப்பிடத்தக்க வகையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இப் பேச்சுவார்த்தையானது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண்பது மற்றும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்ப பெறுவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.