(எம்.மனோசித்ரா)

உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றபோது வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

இலங்கையில் போர் காலகட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் 8 எட்டு மாவட்டங்களின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் 17 நாட்டு தூதுவராலயங்களின் பிரிநிதிகளை சந்தித்து மகஜரினையும் கையளித்துள்ளனர்.

பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளிடம் இந்த மகஜர் கைளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.