(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு – டாம் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு மேலதிகமாக பிரதான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (சி.சி.டி.) கையேற்றுள்ளனர்.  

இந் நிலையில் நேற்று இடம்பெற்ற இந்த துப்பககிச் சூட்டில் காயமடைந்த இளைஞனிடமும் வைத்தியசாலையில் வைத்து வாக்கு மூலம் பெற்றுக்கொண்டுள்ள சி.சி.டி.யினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார். 

வாழைத்தோட்டத்தை சேர்ந்த குறித்த இளைஞர் கால்பந்தாட்டம் விளையாட சென்று திரும்பும் போது, அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

பணம் கொடுக்கல் வாங்கலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.