வெடிபொருட்கள் அகற்றப்பட்ட காணிகளில் அடுத்த மாதம் மக்கள் மீள்குடியேற்றப்படுவர் 

Published By: Digital Desk 4

18 Feb, 2019 | 04:06 PM
image

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட  பகுதிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் 70 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்  ஜெயராணி பரமோதயன்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 2009 ஆம்ஆண்டு நவம்பர் மாதம் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நாற்பதாயிரததிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர்.

இருந்த போதும், கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்டமுகமாலை இத்தாவில் வேம்பொடுகணி ஆகிய இடங்கிளிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் கடந்த 19 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற முடியாத நிலையில் வெளிமாவட்டங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்தபிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தாங்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளதாகவும் விரைவாக வெடிபொருட்களை அகற்றி தங்களை மீள்குடியேற்றுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் இன்று (18) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவிய போது, முகமாலை இந்திராபுரம் வேம்பொடுகேணி ஆகிய பகதிகளில் தற்போது வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு பகுதி காணிகளில் வெடிபொருடகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட காணிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர். 

இதற்கென 70 குடும்பங்கள் வரையில் தமது பதிவுகளை மேற்கொணடுள்ளனர்  எனக் குறிப்பிட்ட அவர், முகமாலை வேம்பொடுகேணி இந்திராபுரம் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறுவதற்காக இதுவரை 286 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07