(நா.தனுஜா)

இப்போது குற்றமிழைத்தவர்களை மன்னித்து, மறந்து பயணிப்பதற்கு தீர்மானிக்கலாம். எனினும் நாளை வேறொரு நாட்டில் இது போன்ற யுத்தக்குற்றங்கள் இடம்பெறுகையில், அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்கு இலங்கை ஒரு தவறான முன்னுதாரணமாகக் கொள்ளப்படும் வாய்ப்புக்கள் உருவாகும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

வடக்கிற்கு பயணித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு தரப்பு தவறுகளையும் மறந்து, மன்னித்துப் பயணிப்போம் எனத் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

யுத்தக்குற்றங்களுடன் தொடர்புடைய தாக்குதல்களுக்கு கட்டளையிட்ட இராணுவ அதிகாரிகள் யார்? அவர்களுக்கு கட்டளை வழங்கிய அரசியல்வாதிகள் யார்? என்பது போன்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.உள்ளக விசாரணைப் பொறிமுறைகளில் நம்பிக்கையின்மையின் காரணமாக இவ்விடயம் குறித்து சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.