(ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர்  தேசிய அரசாங்கம் குறித்தும் அரசியல் அமைப்பு பேரவை குறித்தும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை நாம் ஏற்றுகொள்ளவில்லை, கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் என்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இப்போது மீண்டும் தேசிய அரசாங்கம் என்ற கதை உருவாக அவர்களின் சுயநல சிந்தனையே காரணமாகும். அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. அதற்காகவே அவர்கள் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் இதன்போது தெரிவித்தார்.