சூட்சுமுமமான முறையில் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கொடுக்கல் வாங்களில்  ஈடுப்பட்டு வந்த பல்கலைக்கழக  மாணவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவத்தப் பகுதி வியாபார நிலையமொன்றில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் போலி நாணயத்தாள்களைக் கொடுத்து கொடுக்கல் வாங்கலில் குறித்த மாணவன் ஈடுப்பட்டதாக ஹொரனை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிசார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்கிரிய - நம்பபான பகுதியைச்சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பொலிசார் சந்தேக நபரான இளைஞனை  கைது செய்யும் போது  அவரிடமிருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ,பொலிசாரின் விசாரணைகளின் பின் இங்கிரியவில் உள்ள இளைஞனின் வீட்டை சோதனையிட்டப்போது இரண்டு 1000 ரூபாய் போலி நாணயத்தாள்களும் ,500 ரூபாய் போலி  நாணயத்தாள் ஒன்றும் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய அச்சியந்திரம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.