(ஆர்.யசி)

மாகாணசபை தேர்தல் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க நாளைமறுதினம் கூடும் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

சகல கட்சிகளையும் அழைத்து உடனடியாக தீர்வு காண பிரதமர் பணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மாகாணசபை தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியே தடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் நாம் ஆரம்பத்தில் இருந்தே தேர்தலை பழைய முறைமையில் நடத்துவோம் என கூறினோம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தேர்தலை புதிய முறைமையில் நடத்த வேண்டும் என கூறியதுடன் அவர்களே தேர்தலை பிற்போடவும் காரணமாக இருந்தனர். அவர்களின் அமைச்சரே எல்லை நிர்ணய அறிக்கையை தயாரித்து இறுதியில் வாக்கெடுப்பில் அவரே  எதிராக வாக்களித்தார். எவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உடனடியாக பெற வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.