சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவர் நடித்து மே மாதம் 1 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்த டீஸரில் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கலாகவும், நாயகி லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா பெரிய பணக்கார பெண்ணாகவும் தோன்றுகிறார்கள். வசன, காட்சி அமைப்புகள் ஆகியவற்றைப் பார்க்கும் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான ஒரு படத்தினை பிரபதிபலிப்பது போல் உள்ளது என்கிறார்கள் இணையவாசிகள்.

இருந்தாலும் சிவகார்த்திகேயன், யோரிக பாபு, சதீஷ் நயன்தாரா இணைந்திருப்பதாலும், நகைச்சுவை பட இயக்குநரான எம் ராஜேஷ் இயக்கியிருப்பதாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் மே மாதம் முதல் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.