பெண்ணொருவர் செலுத்திச் சென்ற வேன் பாதையை விட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் பெண் ஒருவர் பலியானதுடன் அறுவர் கடுங்காயங்களுக்குள்ளாகினர்.

இவ் விபத்து தனமல்விலையைச் சேர்ந்த உடவலவ்வ என்ற இடத்தில் 36 வது மைல் கல்லருகே இன்று இடம்பெற்றுள்ளது.

பெண் சாரதி உட்பட மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் விபத்தில் காயங்களுக்குள்ளாகி தனமல்விலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் ஒரு பெண் உட்பட மூவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தனமல்விலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

குறிப்பிட்ட பெண் சாரதியின் கவனயீனமே இவ் விபத்திற்கு காரணமென்று பொலிசார் தெரிவித்தனர்.