ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி முடிவு இன்று ; தூத்துக்குடியில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

Published By: Vishnu

18 Feb, 2019 | 11:34 AM
image

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி திர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் சுமாமர் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அதனை மூடுவதற்கு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். 

கடந்த மே 22 திகதி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தார்கள்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை தீவிரம் அடைந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆலை மூடப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து. இதில் ஆலையை திறக்க அனுமதி கிடைத்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து.

இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை என்று தீர்ப்பு வெளியானால் பிரச்னை பெரிதாக ஏற்படாது. 

ஆனால் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் சுமார் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47