அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைசெய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உட்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா.

இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது.

 

இந்நிலையிலேயே வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அதனை ஏற்று, ட்ரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன் அவர் பரிந்துரை கடிதத்தின் நகலை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்தார். வொஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட ட்ரம்ப், இந்த தகவலை தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.