தீவிரவாத தாக்குதலுக்கு பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

Published By: R. Kalaichelvan

18 Feb, 2019 | 10:17 AM
image

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தீவரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளனர். 

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ  தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

‘அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு, இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோக மயமான இந்த நேரத்தில், உங்களுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய மக்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம். தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல பாலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அப்பாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

‘பயங்கரவாத தாக்குதலால் மிகுந்த ரணம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும், அரசுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடனும், உங்கள் மக்களுடனும் எங்கள் உடனிருப்பையும், கூட்டணியையும் உறுதிப்படுத்துகின்றோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இறைவன் இரக்கம் காட்டுவாராக’ என்று அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08