பொலிவூட் நட்சத்திரமான சாஷரூக் கானின் பென்” (FAN) திரைப்படம் சில நாட்களில் திரையிடப்படவுள்ளமையால் புதிய பிரசார நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரசார நடவடிக்கையால் சாஷரூகானுக்கு நேரடியாக கடிதங்களை அனுப்பி வைக்க கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துள்ளது.இதற்கமைய சாஷரூகானிற்கு இலங்கையைச் சேர்ந்த யுவதியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த யுவதி அக்கடிதத்தில் சித்திரமொன்றையும் வரைந்து அனுப்பி வைத்துள்ளார். அதை பார்வையிட்ட சாஷரூக் கான் குறித்த யுவதி எதிர்காலத்தில் மிக சிறந்த  சித்திர கலைஞராக  வருவார் என அவர் தெரிவித்துள்ளார்.