கண்டி வெனிலா உற்பத்தியாளர்கள் சங்கம் ஜப்பானுக்கு வெனிலா ஏற்றுமதியை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் கண்டி வத்தேகம ஹோட்டல் ஒன்றில் அண்மையில் நடைபெற்றது.

கண்டி வெனிலா உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துபண்டார மடுல்கலவின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி.ஹீன்கெந்த கலந்து கலந்து கொண்டார். 

இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு வெனிலாவை ஏற்றுமதி செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.