பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மிருசுவில் நாவலடி தொடருந்துக் கடவையில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் இருவரும் மோத நேரிட்டது.

இந்தக் கடவைக்கு 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டு மாதாந்தம் வேதனம் வழங்கப்பட்டு வரும் நிலையிலும்,கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிப்பதில்லை.

கடவை மூடப்படாததால் அதனைக் கடக்க முற்பட்ட இருவர், தண்டவாளத்தில் ஏறிய பின்னர் ரயில் வருவதை அவதானித்து பாய்ந்து சென்றதால், மூன்று செக்கன் இடைவெளியில் உயிர் தப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டது.