கொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டில் 28 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கெசல்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது