பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி டிஸ்போர்ட்டில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், புல்வாமாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பை டிஸ்போர்ட் நிறுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் யாரும் விளையாடாத நிலையிலும், டிஸ்போர்ட் இந்தியாவுக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கி கடந்த வருடத்தில் இருந்து இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் எதிரொலியாக டிஸ்போர்ட் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.