(எம். எப். எம். பஸீர்)

பாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட  நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முதலாவது விசேட மேல் நீதிமன்றம்  ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்  2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் முதலாம் இலக்க  மேல் நீதிமன்ற அறையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1978 ஆம்  ஆண்டின் 02 ஆம் இலக்க  நீதிமன்ற சேவைகள் அமைப்பு சட்டத்தின் பிரகாரம்   நீதியமைச்சருக்கு உள்ள  விசேட அதிகாரங்களின் படி  இந்த விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டு மே மாதம்  இந் நீதிமன்றங்களுக்கான அனுமதி  பாராளுமன்றத்தின் பெரும்பாரும்பான்மையுடன் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் கடந்த  வருடம்  ஆகஸ்ட் மதம்  21 ஆம் திகதி  முதலாவது  விசேட மேல்  நீதிமன்றம்  நிறுவப்பட்டு முன்னர் போக்குவரத்து நீதிவான் நீதிமன்றம் இருந்த இடத்தில்  தற்போது செயற்பட்டு வரும் நிலையில்  2 ஆவது விசேட மேல் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் பெயர் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.