பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விவகாரத்தில் அப்பட்டமாக தொழிலாளர்கள்  ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் .மாறாக தொழிலாளர்களின் வயிற்றில் அரசாங்கமும் அடிக்க கூடாது என வழியுறுத்தியும் கூட்டு ஒப்பந்தம் ஊடாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் ஒரு ஏமாற்று நடவடிக்கை என்றும் அதற்கு  பாரிய எதிர்ப்பினை தெரிவித்தும் ஆயிரம் ரூபாய்  இயக்கம் அதனுடன் இணைத்துள்ள 30 க்கு உட்பட்ட சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஹட்டனில் எதிர்ப்பு பேரணியும், ஆர்ப்பாட்டம் ஒன்றையும்  நடத்தினர்  .

இன்று ஹட்டன் மல்லியப்பு சந்தியில்  மக்கள் எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஹட்டன் நகரின் மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் வந்தடைந்த பேரணியில் கலந்து கொண்டோர். அங்கு பலத்த எதிர்ப்பினை  கோஷங்கள் எழுப்பி வெளிக்காட்டியதுடன் பதாதைகளுடனும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

ஆயிரம் ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில்  இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தோட்ட தொழிலாளர் சமூக நலனில் அக்கறையுள்ள ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

ஆயிரம் ரூபாய் இயக்கத்தில் இணைந்து செயற்படும் மலையக  மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் எஸ்.கணேசலிங்கம் தலைமையில்  இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரம் ரூபாய் இயக்கத்தில் இணைந்துள்ள இடதுசாரி  கட்சிகளும், சோசலிச கட்சிகளின் உறுப்பினர்களுமாக 30க்கு மேற்பட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிநிகள், சமய குருமார்களும் கலந்து கொண்டனர். 

இதன் போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்த  அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை கோரிக்கையாக முன்வைத்து போராடிய போதும், அவர்களுக்கு வெறுமனே 20/= ரூபாவை வழங்கி ஒப்பந்தம் செய்து ஏமாற்றி விட்டனர்.

அப்பட்டமாக ஏமாற்றப்பட்டுள்ள தொழலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஏமாற்றி இம்முறையும் ஏமாற்றத்திற்கும் துரோகத்திற்கும் தொழிலாளர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 750/= ரூயாய்க்கு மேலாக 140/=ரூபாயை பெற்றுதருவதாக கூறியவர்களும்  ஏமாற்றிவிட்டனர். இவ்வாறு  தொழிலாளர்களை தொடர்ந்து ஏமாற்றுவதை எதிர்த்து இந்த ஆர்பாட்டம்  மற்றும் பேரணி நடத்தப்படுவதாக கோஷமிட்டமை குறிப்பிடத்தக்கது