(ஆர்.யசி)

வடக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியிலே போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமையானது எமது நாட்டினை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டம் கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், 

நான்கு ஆண்டுகள் நல்லாட்சியில் தலைமைத்துவத்தை வைத்துகொண்டு ஆட்சியாரகளின் ஊழல் மோசடிகளை தடுக்க முடியாது போனதன் காரணத்தினால்தான் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக போராடி வருகின்றார். 

இன்று ஜனாதிபதி எமது பக்கம் வந்துவிட்டார்  என  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  குறிப்பிட்டார். வடக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியிலேயே போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் கூறுகின்றமை எமது நாட்டினை சர்வதேசத்திடம் கட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது எனவும் அவர் குறிப்பிட்டார்.