(எம்.எப்.எம்.பஸீர்)

தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

 

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் காலி, றத்கம பகுதியில் இரு வர்த்தகர்கள் காணாமல்லாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யி.னர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இந்த தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.