இருவேறுபட்ட பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அங்குலானைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்குலானைப் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் அங்குலாணை பொஸிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலக்கமைய மெற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ - அங்குலானை பகுதியைச்சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட வனமுல்ல, எலஹிடியாவ பகுதி வீடொன்றில் நேற்றிரவு 9.30 மணியளவில் நாரம்மல பொலிசாருக்க கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய , வீட்டை சோதனைக்குட்ப்படுத்திய போது 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வனமுல்ல - எலஹிடியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இதன்போது கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.