இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போட்டியிடக்கூடியதாக அவரை அமெரிக்கப் பிரஜாவுரிமையில் இருந்து விடுவிப்பதற்கு வாஷிங்டன் இணங்கக்கூடியது பெரும்பாலும் நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கைகொண்டிருக்கிறது போல் தோன்றுகிறது என்று கொழும்பில் அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் குழுவொன்றுடன் நடத்திய சந்திப்பின்போது கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்காக பிரசாரம் செய்வதற்கு தலைமைத்துவம் தயாராயில்லை என்று தெரிவித்திருந்தார்.அதனால் அவர்களது அணியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இப்போது நிராகரிக்கப்படுகின்ற சூழ்நிலையிலேயே கோதாபயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து அவதானிகள் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கிறார்கள்.

 பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று தனது கட்சியின அமைப்பாளர்களிடம் பசில் ராஜபக்ச  கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியொன்றை அமைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கும் பட்சத்தில் தன்னை வேட்பாளராக நியமிப்பதற்கு வகைசெய்யக்கூடிய வியூகங்களில் ஜனாதிபதி சிறிசேன இறங்கியிருந்தாலும் இனிமேல் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகத்தெரிகிறது.

தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை ரத்துச்செய்வதற்காான விருப்பத்தை கோதாபய அமெரிக்காவுக்கு தெரியப்படுத்திவிட்டதாகவும் அதற்கான நடைமுறைகளின் பிரகாரம் அவர் தனது வேண்டுகோளை இரண்டாவது தடவையாகவும் முன்வைக்கவேண்டும் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொதுஜன பெரமுன அதன் வேட்பாளராக கோதாபயவை களமிறக்கும் நம்பிக்கையிலேயே வியூகங்களை வகுத்துவருகின்றது. தமிழர்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் ஆதரவு இல்லாவிட்டாலும் கோதாபயவே பொதுஜன பெரமுனவுக்குள் இருப்பவர்களில் பெரும்பாலும் வெற்றிபெறக்கூடிய வேட்பாளராக நோக்கப்படுகிறார். 

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு இடமிருக்கப்போவதில்லை என்பதை பொதுஜன பெரமுன தலைவர்கள் தெளிவாக உணர்த்திவருகின்ற போதிலும் அவரின் தலைமையிலா சுதந்திர கட்சியுடன் கூட்டுச்சேருவதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தமிழ், முஸ்லிம் பகுதிகளில் தங்களது கூட்டணியின் சார்பிலான பிரசாரங்களில் சிறிசேனவை  முன்னணியில் பயன்படுத்தமுடியும் என்று பொதுஜன பெரமுன தலைவர்கள் நம்புகிறார்கள்.

இது இவ்வாறிருக்க, அமெரிக்கப் பிரஜாவுரிமையில் இருந்து கோதாபயவை விடுவிக்க மறுப்பதன் மூலம் அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாமல் அமெிக்கா தடுக்கும் என்ற ஒரு சந்தேகம் சில வட்டாரங்களில் நிலவுகிறது.ஆனால், அது தவறானது என்று  அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ஒரு போர்க்குற்றவாளியாக அமெரிக்காவினால் அல்லது ஐக்கிய நாடுகளினால் கருதப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

  " பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோதாபய போரை வழிநடத்தினார்.இராணுவத்தில் இருந்த மற்றவர்கள் கடமை என்ற வகையில் செய்த காரியங்கள் எல்லாம் கோதாபயவின் கட்டளையின் படியே  அமைந்தன. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்காவுக்கு அக்கறை இருந்திருக்குமானால் அவர்கள் பத்து வருடங்கள் தாத்திருந்திருக்க வேண்டியதேவையில்லை.அமெரிக்ப் பிரஜ என்றவகையில் அவர் சுதந்திரமாக அமெரிக்காவுக்கு சென்றுவருகின்றார்" என்று ஒரு வட்டாரம் கூறியது.

 அத்துடன் விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தில் ராஜபக்ச அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது என்பதை அமெரிக்கா இலங்கை கடற்படையுடன் பகிர்ந்துகொண்ட பலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே  2007 ,2008 ஆம் ஆண்டுககளில் ஆழ்கடலில் வைத்து புலிகளின் ஆயுதக்கப்பல்கள் நிர்முலஞ்செய்யப்பட்டதிலிருந்து விளங்கிக்கொள்ளமுடியும்.

கோதாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தவேளையிலேயே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டிருந்தன. அதனால் ஜனாதிபதி தேர்தலில் அவர் வேட்பாளராவதை அமெரிக்கா பகைமையுடன் நோக்கும் என்ற சந்தேகம் எந்தவித ஆதாரமும் அற்றது என்று அவதானிகள் கூறுகிறார்கள்.

இத்தகைய பின்புலத்தில், கோதாபயவுக்கு மாற்றாக இன்னொருவரை குறிப்பாக இன்னொரு ராஜபக்சவை தேடுவதில் பொதுஜன பெரமுன அக்கறைப்படவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

 ( சவுத் ஏசியன் மொனிட்டர்)