ஐ.பி.எல். ஆரம்ப விழா: சம்பியன் பாடலுக்கு நடனமாடி அசத்தவுள்ளார் பிரவோ ( காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

08 Apr, 2016 | 04:52 PM
image

ஐ.பி.எல்.  9 ஆவது சீசனின்  ஆரம்ப விழாவில், சம்பியன் பாடலுக்கு  பிராவோவுடன் இணைந்து சில மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களும் நடனமாடுகின்றனர். 

ஐ.பி.எல். 9 ஆவது சீசனின் முதல் போட்டி நாளை 9 ஆம்  திகதி மும்பையில்  இடம்பெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.  

முன்னதாக இன்று மாலை 7.30 மணிக்கு ஐ.பி. எல். கோலாகல ஆரம்பவிழா  இடம்பெறவுள்ளது.

 

இதில், பொலிவுட் நட்சத்திரங்கள் கத்ரீனா கைப்,  ரன்வீர் சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள்  இடம்பெறவுள்ளன. 

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குஜராத் லயன்ஸ்  அணி வீரர் பிராவோ, தனது சம்பியன் பாடலுக்கு நடனமாடுகிறார். 

இது குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவிக்கையில்,

 

மும்பையில் இடம்பெறும் ஐ.பி.எல். 9ஆவது சீசனின் ஆரம்பவிழாவில், சம்பியன் பாடலுக்கு  பிராவோ நடனமாடுகிறார். 

அவருடன் இணைந்து இன்னும் சில மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களும் நடனமாடுகின்றனர். 

ஐ.பி.எல். இல் முதல் முறையாக  இந்த தொடரில் எல்இடி விக்கெட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிரும் எல்இடி விக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. 

அதன்பின் 2014 ஆம்  ஆண்டில் இருந்து ஐ.சி.சி. இருபதுக்கு - 20 மற்றும் 50 ஓவர் உலகக் கிண்ண தொடர்களிலும் எல்இடி விக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த வரிசையில்  ஐ.பி.எல். இல் முதல் முறையாக இந்த சீசனில்தான் எல்இடி விக்கெட்டுகள்  பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09