ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் (E.T.P) கடந்த 2018 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர பரீச்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பன்னீராயிரம் ரூபா (12000) பண வெகுமதி வழங்கும் திட்டமொன்று நடைமுறைபடுத்தபட்டிருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்நது அவ் அறிக்கையில் 

“ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் (E.T.P) அங்கத்தவர்களினது பிள்ளைகளாக இருக்கவேண்டியதும் பண வெகுமதி பெறுபவர்கள் பாடசாலையில் விண்ணப்பதாரிகளாக இருக்கவேண்டியதும் அவசியமாகும்.

இதற்கான அறிவுறுத்தல்களையும் விண்ணப்பபத்திரங்களையும் பதுளை பிராந்திய எமது அலுவலகம் ஊடாக பெற்றுகொள்ள முடியும். அத்துடன் மேலதிக விளக்கங்களை தெரிந்துகொள்ள விரும்பின் 0716959985 அல்லது 0552231526 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது நேரடியாகவும் தொடர்பு கொண்டு. பெற்றுக்கொள்ளபடும் 

விண்ணப்ப பத்திரத்தை பூரணபடுத்தி அடுத்த மாதம் 25 ஆம் திகதிக்கு (25.03.2019) முன்னர் கிடைக்கும் வகையில் புலமைபரிசில் உத்தியோகஸ்தர் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை (இலக்கம் 92 கிருள வீதி நாரஹெனபிட்டிய கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் அத்துடன் தபால்லுறையின இடது பக்க மேல் மூலையில் “உயர்தரம் 2018” என்று குறிப்பிடல்+ வேண்டும

ஒரு மாணவர் சார்பாக ஒரு விண்ணப்பபத்திரம் மட்டுமே சமர்பிக்க முடியும் இப்பண வெகுமதி ஒரு மாணவருக்கு ஒரு தடைவ மட்டுமே பெற்றுக்கொள்ளளாம். விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர்களில் ஒருவர் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில (E.T.P) அங்கத்தவராக இருக்க வேண்டியதும் முக்கியமாகும். 

பெற்றோரில் இருவரும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவராக இருந்தாலும் ஒருவரினால் மட்டுமே விண்ணப்பத்தை சமர்பிக்க முடியும் பண வெகுமதி பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியின் தேசி அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நிழற்படப் பிரதிகள் எடுக்கப்பட்டு அப்பிரதிகள், குறிப்பிட்ட பாடசாலை  அதிபர்களினால் உறுதிபடுத்தபட்டிருக்கவும் வேண்டும். 

ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவைகளும் அப் ப்பாடசாலை அதிபர்களினால் நிவர்த்தி செய்யப்பட்டு அவ் அதிபர்களினால் பெறப்பட்ட உறுதிபடுத்தபட்ட கடிதங்களை அவ் விண்ணப்ப பத்திரங்களுடன் இணைக்கபட்டிருத்தல் வேண்டும்.

ஆகவே மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி திகதிக்கு முன்னர்குறிப்பிட்ட விலாசத்திற்கு பதிவு தபாலில் அனுப்பவேண்டும். கிடைத்திருக்கும் இச் சந்தர்பத்தை எமது சமுக மாணவ மாணவிகள் பூரணமாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்ற நோக்கிலேயே இதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளேன்”; என்று குறிப்பிடபட்டுள்ளது.