வவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில்  வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம்  என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பட்டகாடு பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர்  தமது தேவை  நிமித்தம் குடும்பமாக நேற்று காலை 8 மணிக்கு வெளியே  சென்றிருந்த சமயத்தில் அவ் வீட்டின் முன்  கதவினையுடைத்து 5 பவுண் தாலிக்கொடி, நகை, இருபதினாயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

தமது தேவைகளை முடித்த பின்னர் குடும்பமாக மாலை 3மணியளவில்  வீடு திரும்பிய சமயத்தில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து வீட்டார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றினை மேற்கொண்டனர்.

முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இச் சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.