பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 3,50000 ரூபாவாகவும், மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு 24,000 ரூபாவாக இருந்த தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.