(ஆர்.யசி)

நான்கு நாட்கள் பயிற்ச்சி நடவடிக்கைகளுக்காக ஈரான் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 

இலங்கையில் தரித்திருக்கும் நாட்களில் இலங்கை கடற்படையுடன் கூட்டு கடற்படை பயிற்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளனர். 

ஈரானின் கடற்படையினரின் ஆயுதம் தாங்கி போர்க்கப்பல்களான பஸ்ஹேர், லவன் மற்றும் பெயண்டோர் ஆகிய மூன்று கப்பல்களும் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்து வந்தடைந்தது. இலங்கைக்கு வருகை தந்த ஈரானிய போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை தமது மரபுகளுக்கு அமைய வரவேற்றிருந்தனர். ஈரானின் போர்க்கப்பல்களில் வருகை தந்திருந்த கப்பல் கட்டளை தளபதிகளான லெப்டினன்ட் கொமாண்டர் மெஹ்மூட் பத்வி, லெப்டினன்ட் கொமாண்டர் ஹசன் பெய்கி மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் மொஹம்மட் பக்ஹெர் ரஹ்னமா ஆகியோர் இலங்கை வடக்கு கட்டளை தளபதி ரியல் அட்மிரல் நிஷாந்த உளுகெட்தென்னவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இரு நாட்டு கடற்படை அனுபவங்களையும் பகிர்ந்திருந்தனர். 

மேலும் குறித்த மூன்று ஈரானிய கப்பல்களும் நாளை வரை இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள நிலையில் குறித்த நாட்களில்  இலங்கை கடற்படையினருடன் ஈரானிய கடற்படையினர் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர். அதேபோல் கலை கலாசார மற்றும் விளையாட்டுகளிலும் ஈடுபடவுள்ளனர்.