வவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் நேற்று வீட்டின் சமயலறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்  பாடசாலை மாணவி சமைப்பதற்காக சமையலறைக்கு சென்று காஸ் அடுப்பினை கொழுத்திய சமயத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. உடனடியாக அயலவர்களின் உதவியுடன் மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பாடசாலை மாணவி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவியின் நிலமை கவலைக்கிடமாக காணப்படுவதினால் மேலதிக விபரங்கள் எவையும் தற்சமயம் தெரிவிக்க முடியாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.