2015ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் 2018 ஆம் ஆண்டு  டிசம்பர் 31 வரையான காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் ஊழல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

அவை தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் என குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் ஊழல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 14 ஆம் திகதி கூடிய போது ஆணைக்குழுவுக்கு முதலில் கிடைத்த 48 முறைப்பாடுகளில் 02 ஐ விசாரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.