டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் இரு காணிகள் அரசுடமையாகப்படும் என்ற சிவப்பு அறிவித்தலுடன் சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்களில் பொருத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட கல்வயல் வாகையடி ஒழுங்கையில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட பற்றைகளால் அயலில் உள்ள வீடுகளில் உள்ள மூன்று பிள்ளைகள் டெங்குத் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளளனர்.

அவ்வாறு சங்கத்தானை பெரிய அரசடி சாலையில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட பற்றைகளில் உருவான டெங்கு நுளம்புகளினால் அயலில் உள்ளவர்கள் டெங்குவினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இரு காணி உரிமையாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினரால் அறிவித்தல்கள் வழங்கப்பட்டும் இதுவரை காணிகள் துப்பரவு செய்யாததால் இன்று இரு காணிகளிலும் காணிகள் துப்பரவு செய்ய இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இக் காலப்பகுதிக்குள் துப்பரவு செய்யப்படாவிடின் உள்ளுராட்சி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் காணி அரசுடமையாக்கப்படுமெனவும் குறிப்பிட்டு சிவப்பு அறிவித்தல் பொருத்தியுள்ளனர்.