தங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்றுச்செல்லும் பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த பெண் பெல்மடுல்லையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குள் சென்று  அவரிடமிருந்த போலி நகையினை கொடுத்து  80 ஆயிரம் பெறுமதியான தங்க நகையினை பெற்றுச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த விற்பனை நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் குறித்த பெண் கொடுத்து சென்ற நகை போலியானது என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.