அனுராதபுர நகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை குப்பை கூளத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, குறித்த தொப்பி மற்றும் வெடிமருந்துங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த இடத்துக்கு சென்று  வெடிமருந்துகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பொருட்களை விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இரகசியமான முறையில் குறித்த பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர், இவ்வாறு குப்பை கூளத்தில் வீசி சென்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட அனுராதபுர பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.