ஆப்கானிஸ்தானின் வடக்கே பர்யாப் மாகாணத்தில் கர்ஜிவான் மாவட்டத்தில் அமைந்த சில பாதுகாப்பு சோதனை சாவடிகள் மீது இன்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.இதனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.  இதன்பின் சம்பவ பகுதியில் 7 தீவிரவாதிகளின் உடல்கள் கிடந்துள்ளன.காயமடைந்த 4 தீவிரவாதிகள் மீட்கப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.இதுபற்றி தலீபான் அமைப்பினர் எந்த தகவலும் அளிக்கவில்லை.