அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும், வடகொரிய ஜனாதிபதி கிம்மும் இரண்டாவது முறையாக இம் மாதம் சந்திக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தெரிவித்ததாவது,

வடகொரிய ஜனதிபதி கிம் உடனான இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமானதாக இருக்கும். எங்களது முந்தைய சந்திப்புக்குப் பிறகு இருதரப்பு உறவில் முன்னேற்றம் இருப்பதால் பல ஆவணங்களில் கையெழுத்திட இருக்கிறோம்.

நாங்கள் இருவரும் முன்னர் சந்தித்த சந்திப்பு போல இச் சந்திப்பும் வெற்றியாக  இருக்கும் என்று நம்புகிறேன். 

அந்தச் சந்திப்புக்குப் பிறகு ரொக்கெட்கள் பறக்கவில்லை, ஏவுகணைகள், அணு ஆயுத சோதனைகளும் நடத்தப்படவில்லை. எங்களது பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.