தாயின் சடலத்தை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது!

Published By: Daya

16 Feb, 2019 | 02:54 PM
image

அமெரிக்காவில் உயிரிழந்த தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் பிரிஸ்டால் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான ஜோ விட்னி அவுட்லண்ட் தாய் 78 வயதான ரோஸ்மேரி மகள் இவர்கள் வசித்த வீடு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது.

குறித்த சம்பவத்தன்று விட்னியின் உறவினர் ஒருவர், அவரது வீட்டு யன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது,  விட்னியின் தாயின் சடலம், போர்வைகளால் சுருட்டி வைக்கப்பட்டு இருந்ததை அறிந்துள்ளார். 

குறித்த சம்பவம்  பற்றி உடனடியாக பொலிஸாருக்கு  தகவல் கொடுத்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விட்னியின் தாயாரின் உடலை கைப்பற்றிய போது உடல் 54 போர்வைகள் கொண்டு சுருட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் தாயின் சடலத்தை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த பெண் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கடிதம் ஒன்றை பொலிஸார்  எடுத்துள்ளனர். இதில் ரோஸ்மேரி கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று உயிரிழந்ததாக எழுதப்பட்டிருந்தது. இடைப்பட்ட நாட்களில்  உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என யாரையும் விட்னி வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை. சடலத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை மறைக்க, 66 விதமான வாசணை திறவியங்களை பயன்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றபோது, அவரது வீட்டில் இருந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

குறித்த பெண் தாயின் மரணத்திற்கு பிறகு ஜோ விட்னி உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார் இந்நிலையில் கடந்த செவ்வாயன்று குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணை நீதிமன்றத்திற்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விட்னி தரப்பில் வாதாட சட்டத்தரணிகள் யாரும் இல்லை.

இதன் பின்னர் பொலிஸாரின் விசாரணையில் இருந்த அவரை விடுவித்து, மீண்டும் பெப்ரவரி 28ஆம் திகதி நீதிமன்றில்  ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தாய் உயிரிழந்தையை  வெளியில் சொன்னால் பொலிஸார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் யாரிடமும் சொல்லவில்லை என விசாரணையின்போது விட்னி தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10