துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக பனிட்டா சாந்து என்ற பொலிவுட் நடிகை நடிக்கிறார்.

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகவிருக்கும் படம் வர்மா. இயக்குநர் பாலா இந்த படத்திலிருந்து விலகிய பிறகு மீண்டும் இந்த படம் புதிதாக படமாக்கப்படவிருக்கிறது. 

இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க பொலிவுட் நடிகை பனீட்டா சாந்து தெரிவாகியிருக்கிறார். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இவர் ஏற்கனவே பொலிவுட்டின் இளம் நடிகர் வருண் தவானுடன் ஒக்டோபர் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர். லண்டனில் வளர்ந்த இவர் பிரபலமான கம்பனிகளில் விளம்பர மொடலாகவும் தோன்றியிருக்கிறார்.

இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநரான சந்தீப் வங்காவின் உதவியாளர் ஒருவர் இயக்கக்கூடும் என்று தெரியவருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரமுக்கும், பனீட்டா சாந்துவிற்கும் விரைவில் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியாகும் என்று படகுழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.