தமிழகத்தில் காதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் 1,200 மாணவ - மாணவியர் கல்வி பயில்கிறார்கள்.

குறித்த பாடசாலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளான்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன், மதிய உணவு நேரத்தில் வகுப்பறையில் குறித்த மாணவியின் கழுத்தில் மாணவன் வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளான்.

குறித்த மாணவி வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலையில் திரண்டு, ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறித்த மாணவனை பாடசாலையில்  இருந்து நீக்குமாறும் அறிவுறுத்தினர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் பாடசாலையில் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.