இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த முறை வெளியான  பட்டியலில் இலங்கை 111 ஆவது இடத்தில் இருந்து இம்முறை 11 இடங்களால் முன்னேறி 100 ஆவது இடத்தை அடைந்துள்ளது என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். 

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் . 

கொழும்பு மாநகர சபை, பதிவாளர் நாயக திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை ஒன்றிணைந்து வியாபார பதிவு நடைமுறைகளை இலகுவாக்கியுள்ளன. 

இதன் காரணமாக பதிவு நடைமுறைகளுக்கு எடுக்கும் காலம் குறைந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.