தீவரவாதிகளின் சொத்துககள் முடக்கபட வேண்டும்:பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தெரிவிப்பு 

Published By: R. Kalaichelvan

16 Feb, 2019 | 12:39 PM
image

காஷ்மீரில் துணை இராணுவம் மீது தீவரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. தீவரவாதிகள் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவலிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ஜான் போல்டன் கூறும் போது, 

தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே அறிந்து அதனை தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு செய்வோம். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அவரிடம் 2 முறை பேசினேன். 

இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. எந்தவொரு நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது” என்றார். 

இதற்கிடையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும் போது, “ ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் 2002 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டு விட்டது. இருந்த போதிலும் அந்த இயக்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது. 

2001 ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை அமெரிக்கா அறிவித்தது. எதிர்காலத்தில் அந்த இயக்கம் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாங்கள் அளிப்போம். பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 

ஐக்கிய நாடுகள் அவையின் தடை பட்டியலில் உள்ள அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதார வளங்களை உடனடியாக முடக்க வேண்டும்” என்றார். 

இருந்த போதிலும், புல்வமா தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தானிடம் நேரடியாக அமெரிக்கா முன்வைக்குமா? என்பது குறித்து எந்த விளக்கத்தையும் அமெரிக்கா அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34