வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் இன்று (16) அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த முதியவர் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டின் மேல் மாடியில் ஏறி கயிற்றினை போட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

முதியவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய சமயத்தில் வீட்டின் மேலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த குற்ற தடவியல் பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்களுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 68 வயதுடைய கிருபாகரன் கோபால கிருஸ்னன் என பொலிஸார் தெரிவித்தனர்.